Wednesday, January 22, 2020

திருப்பாவை அந்தாதி .

திருப்பாவை அந்தாதி .


பிராப்ய பிராப்பாக ஸங்கிரகம்

மார்கழித் திங்கள் மணவரைக் காட்டவே 
பார்புகழ் நாரணனைக் கூடுமென -- நேர்ந்தனள் 
பாவையர் நோன்பு! உரிமையும் உணர்த்துவாள்  
பூவையர் கூட்டாக வையத்து!

கிருத்யாக்ருத்ய சங்கல்பம் :

வையத்து வாழ்ச்சி பரமன் அடிபாடல்!
செய்முறை யாவும் ஒழுகலோடு -- ஐயம் 
விலக்கி  அடியார் அவர்வை கரைநாடல்  
துலங்குவார் சன்மம்சீர்த் தோங்கு!  

பர சமிர்த்தி பிரயோஜனம் :

ஓங்கு பெரும்சென்நெல் எங்கும் தழைப்பவே 
தேங்கு  புனல்பெருகி கற்புடை -- மங்கையார்  
குறித்தும் குலமன்னர் அந்தணர்  என்றிவர்க்காய் 
வாரிஎழ ஆழியான் வேட்டு!

விதேயனான பர்ஜன்ய தேவதைக்கு கையோலை  :

ஆழிதன் ஆகத் தெழுமேக வண்ணா! நீ 
ஊழியான் கைத்தலத்து ஆழிபோல் -- சூழல் 
சுழித்து எமக்கு தவுமேல் வளப்பம் 
தழைப்பபெய் மாயம் விடுத்து!

பிரம்ஹ ஞான பிரபாவம் :

மாயனை! மாமதுரை மன்னனை! வாயினால் 
ஓயாமல் ஓதி மனம்மொழி -- தோய 
நினைப்பிடுவார் பாபம்போம்! சேமம் 
அனைத்துமாம்! புள்ளுவம் அன்று!

ஆஸ்ரயணத்துக்கு அர்ச்சா சௌலப்யம் என்கை : 

புள்ளும் சிலம்பின! பிள்ளாய்  உணர்ந்திலையோ?
வெள்ளத் தரவில் துயின்றவன் -- உள்ளம் 
புகுந்து குளிர்ந்தாயால்? புள்ளரையன் கோயில் 
சகத்திலாய் மற்றவன் கீச்சு!

சேஷத்வத்துக்கு இசைகை  :

கீசுகீசு என்று கலந்தன  கூட்டில்  
நேசமுடன்  புட்கள்!நம் நாயகியே! -- ஏசல்  
தவிர்ந்தவெம்மை சேடப் பொருள் எனநீ 
உவந்திருந்து  கீழ்மை அகற்று!

பாரதந்தர்யத்தில் பர்யவசிக்கை :

கீழ்வானம் வெள்ளென்று அக்ஞானம் வீழ்தலும் 
ஏழையார் வாழ்வு பகலதாய் -- சூழலினி 
அடியார் அவர்பக்கல்  இட்ட வழக்காய் 
நடமினோ தூமுறுவல் ஏற்று!

போக்த்ருத்வம் விலக்கி போக்யதை ஆகல் :

தூமணி  சேரொளி அஃதா மாமாயன் மாதவன் 
தேமதுர தாட்கடிமை நேருவதும் -- காமம் 
தமக்கென் னாது அவன்பொருட்டாய் ஆகி  
உகப்பும் உரித்தவர்க்காய் நோற்று!

சித்த தர்ம சாதனம் :

நோற்று சுவர்க்கம் புகப்பெறல் ஆற்றுவான் 
எற்றுக்கோ? அம்மனாய்! செய்தவேள்வி -- நாற்றத் 
துழாய்முடி நாரா யணன்நிற்க நம்மால் 
சூழப் பெறாதவன் கற்று!

அனுஷ்டான ஔசித்யம் :

கற்றுக் கறவை பலகறந்து தன்கடமை 
ஆற்றுவான் பொற்கொடியே! போதராய்! -- போற்றி 
முகில்வண்ணன் பேர்பாட வேண்டி இரப்ப 
ஆகுமோ கனையா திருப்பு?

அநனுஷ்டான கார்யகரத்வம் :

கனைத்து எருமை முலைவழியே பால்சோ
ரனைத்தில்லம் சேராகும் ! நற்செல்வன் -- தானைத் 
தங்காய்! மனத்துக் கினியானைப் பாடவும் 
இங்கோ உறங்குமிப் புள்? 

ஸ்வயம் பாகம் கோஷ்டி பகிஷ்காரம்  : 

புள்ளின்வாய்க் கீண்டானை! பொல்லா அரக்கனைக் 
கிள்ளிக் களைந்தானை! கீர்த்திமை -- உள்ளத்தே 
உள்ளி எமைத்தள்ளல் கள்ளம்என் றல்லால்என்?
வள்ளன்மை உங்களுக்கு ஈது?

சௌந்தர்யம் ருசி ஜனகம் :

உங்கள் புழக்கடை செங்கழுநீர் வாய்நெகிழ்ப்ப, 
சங்கோடு சக்கரம் ஏந்தும்நம்  -- அங்கை 
அழகன்!மால்! பங்கயக் கண்ணணைப் பாட 
எழுவாய்!நீ! எல்லே உணர்!

ஏற்றிட்ட தோஷத்தை இல்லை என்னாது இசைகை :

எல்லே! இளம் கிளியே! எல்லாரும் போந்தார்என் 
றல்லால் புகுந்தெண்ணிக் கொள் ! அல்லவை -- சொல்லுமேல் 
நானேதான் ஆயிடுக! மாயனை பாடலும் 
தானேநின் நாயகம் நீடு!

பாகவத சம்பந்தம் அநுகல்பம் :

நாயகனாம் நந்தகோபன் கோயில்முன் வாயில் 
நேய நிலைக்கதவம் காப்போனே!  -- ஆயர் 
சிறுமியரோம் ஈண்டு துயிலெழப் பாடிப் 
பெறுவோம்! அம்பரத் தோடு!

ஸ்தாநீகரை முன்னிடல் : :

அம்பரமே  தண்ணீரே சோறே அறம்செய்யும் 
எம்பெருமான் நந்தகோ பாலஆ! -- எம்பிராட்டி 
அம்மே! அசோதாய்! செல்வா! பலதேவா! 
உம்மால்யாம் உந்தல் கடன்!

புருஷகார பிரபத்தி  : 

உந்து மதகளி றன்னநம் நந்தகோபன்! 
சொந்த மருமகளே! நப்பின்னாய்! -- செந்தா 
மரைக்கையால் வந்து திறவாய் மகிழ்ந்து !
நிறைவிளக்கம் அஃதாம் எமக்கு!

பிராபிக்கையில், மிதுனத்துக் குண்டான த்வரை:

குத்து விளக்கு தனைக்காட்டி மற்றவை 
அத்தனையும் காட்டும்! நப்பின்னை! -- குற்றம் 
கணிசியாது மற்றை அருள்நடப்ப செய்வளே! 
மாணியாது  முபற்றும் முடித்து!

பெரிய பிராட்டியாலே பேறு என்கிறது :

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று 
கப்பம் தவிர்க்கும் கலியே! உன் -- அப்பணைக்கு  
ஒப்பனவே செய்தருள்  நப்பின்னை எம்மோய்! 
ஒப்பித்தெம் மின்ஏற்றம் செய்! 

ஸ்வரூப பிர்யுக்த தாஸ்யம் :

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிக்கும் 
ஆற்றல் பெரும்பசுக்கள் முத்திறமும் -- ஆற்றப் 
படைத்தான் மகனே! உமக்கடிமை எம்மின் 
படியது! அங்கமல மற்று! 

அநன்யார்ஹ சேஷத்வம் :

அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான 
பங்கமாய் வந்தார் எனவந்து -- நுங்கண் 
தலைப்பெய்தோம்! அங்கண் இரண்டும் 
மேலைஎம் பால்மாரி போன்று! 

கர்ம பாரதந்ரியம் :

மாரி மலைமுழஞ்சில் மன்னிய சிங்கம்தன் 
மூரி நிமிர்த்து முழங்கி -- புறப்படுமா 
போலே அடிபட இங்கனே போந்தருளி 
மேலா மனைத்தும்தா ஆன்று!

மங்களாசாஸனம் :

அன்றிவ் உலகம் அளந்துநீ பெற்றனை  !
உன்றன் கழல்வாழி! பல்குணத்த -- நின்திறலும்  
பல்லூழி  நீடுவாழி!  எம்முடைச் சேவகம் 
நல்கி  ஒருபா டிரங்கு!

அநன்யப் பிரயோஜனர்களாக வந்தமை கூறல் :

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்திக் 
கிருத்தி! அற்றதற்றோ எம்மின் -- கருத்தும்!
திருத்தக்க செல்வமும் சேவகமும் கூட்டி 
வருத்தமும் தீரமகிழ் மால்! 

ஸாம்யாபத்தி மோக்ஷம் :

மாலே மணிவண்ணா!  மார்கழிநீ ராடுவான் 
மேலையார் செய்வனகள் வேண்டுவன -- ஆலின் 
இலையாய் அருளென்ன மாற்றம் உனக்குடை 
மேநிலை எட்டதும்  கூட்டு!

சாயுஜ்யம் பலம்  :

கூடாரை வேல்லும்சீர் கோவிந்தா! உன்தன்னைப் 
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் -- ஆடை 
அணியும் கூடி இருந்து  குளிர்தல் 
பேணினோம் நோன்புள்  கரந்து !

உபாய வரணம் :

கறவைகள் பின்சென்று உண்போம் அறிவின் 
புறப்பாடு இல்லாமால் உன்னைப் -- பிறவி 
பெறும்தனைப் புண்ணியம் யாமுடையோம்! கோவிந்தா!
ஆறும்நீ யாதலே சித்து!

புருஷார்த்த நிர்ணயம் :

சிற்றம் சிறுகாலை வந்துன்னைச் சேவித்து 
குற்றேவல் லெங்களைக் கொள்வாயால் -- உற்றோமாய் 
ஆட்செய்வோம்! மற்றைநம் காமங்கள் மாற்று ! எம் 
பாழ்த்தவினை வங்கத் தழுத்து !

பல வியாப்த்தி :

வங்கக் கடல்கடைந்த மாதவனால், கேசவனால் 
திங்கள் திருமுகத்து சேயிழையார் -- அங்கப் 
பறைகொண்ட வாற்றை அணிபுதுவை கோதை  
நிறைசெய்தாள் மார்கழிஇன் புற்று! 

கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன்  ஸ்ரீநிவாச தாஸன்.
(K S Srinivasan).

Monday, January 14, 2019

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் :

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் :

1. தியானமும் அர்சனம்போல் நாமசங் கீர்தனம்
வாயும் கலியில் உலகத்து-- ஆய
அனைவர்க்கும் ஆற்ற அமைந்ததாம் மாதம் 
பனிபடு மார்கழி இஃது.


17. அன்னை அவள்தன் அருளுக்கு நம்அரங்கன் 
தன்னைக் குழைத்து தன்தகவும்-- இன்னமும்
என்னென்ன செய்தும் நிகரொப்பான், பின்அவள்
தன்மார்பில் சேரரெட் டித்து.
மையோ மரகதமோ என்மாலோன் மேனிதன்
மையேறிய கண்ணாள் இமையோடிய -- மையாமால்
பொய்யோ அதுஅளித்தான் பேரெழில் போல்ஒன்று?
செய்யாள் தனக்குமிது ஒப்பு.
செய்யாள் அவள்திரு மேனிதன் செவ்விமால்
மையோ டியகண் களில்பாவ -- செய்யகண்ணர்
என்னவரும் ஆக, கருணையும் கண்டிப்பும்
ஒன்று பிறிததா நேர்ந்து.

18. மையோ மரகதமோ என்மாலோன் மேனிதன்
மையேறிய கண்ணாள் இமையோடிய -- மையாமால்
பொய்யோ அதுஅளித்தான் பேரெழில் போல்நன்று
செய்யாள் தனக்குமிது ஒப்பு.
செய்யாள் அவள்திரு மேனிதன் செவ்விமால்
மையோ டியகண் களில்மேவ -- செய்யகண்ணர்
என்னவரும் ஆக, கருணையும் கண்டிப்பும்
ஒன்று பிறிததா நேர்ந்து.

திருமார்பில் ஒண்டொடி யாள்ஒருத்தி திண்சேர்
திருவடியில் என்று ஒருத்தி -- அருகினில்
இன்னும் இருவரை சேர்த்தியெமை யாட்செய்மால்
என்னேயுன் மாய வலை!

இடமில்லா வெஞ்ச மரிடத்து மூத்தோர்
அடல்படித்த ஆசான் எனஇவர் -- பாடே
எதிரிடவோ? என்ற விசயன் கலக்கம்
அதுதரமோ ஆழ்வார்சங் கை ?

கையது ஆழிவெண் சங்கு திருவளர்
தையல் உடனாய் கருடன்மேல் -- வையத்
துளார்க்கண் பட வந்த வரத்துக் கிரங்கி
வளமெழ வாழ்த்தும் அவர்.

அடிகள் அடியே பணிவார் முடிய
அடைவ தவன்தாளே! மாலடியார் -- கூடப்
பெறுவார்க் கவன்நாடு! தன்ஆ ரியன்தாள்
உறுவர்க் கவர்தாளே வீடு!

ஆசாரிய சம்பந்தம் ஒழிந்த பகவத் சம்பந்தம் தியாஜயம் - 
காரணம் புடம் போடாத பொன் நகைக்குதவாது.
ஒருவருக்கும் நீவிரோதி இல்லை அரங்கன்
திருவடி போய்த்தொழ ஈங்கு-- ஒருபாடும்
இல்லை தடைஎன்ன; ஆழ்வான்தாம் சீயர்க்காள்
அல்லதேல்ஆம் என்றவதை நீத்து.

20. ஊன்கொடுத்து இங்குலவு வேத நெறிகொடுத்து 
தான்பிறந்து பின்அவை மெய்பித்து-- வான்ஏற்ற
தான்தன் தகவாம் திருதந்து ஆசரியன் 
மேன்மாலின் தாள்சேர்க்க, பெற்று.

உதார: = கொடுப்பவன்
தாதா = ஸ்வதஹ கொடுப்பவன்
உ+ தாதா = பிராட்டியைக் கொண்டு கொடுப்பவன்
உத்தாதா = உத்தமரான எம்பெருமானாரைக் கெண்டு கெடுப்பவன் 
உத்தரோத்தரம் பலீயம். 
தானாய்க் கொடுப்பது ஸ்ருஷ்டியும் சாஸ்திர பிரதத்வமும்;
பிராட்டியைக் கொண்டு கொடுப்பது ஆபிமுக்கியமும், அனந்யகதித்வமும், பாகவத சமபந்தமும்;
ஆசாரியனைக் கொண்டு கொடுப்பது அதிகாரி பூர்த்தியும், பகவத் சமாஸ்ரயணமும்
என்னலாம்.


21. சிங்கக் குருகு முலையூட்டு வேளையிலும்
அங்குவந்த யானைத் தடல்கொள்பெண்-- சிங்கம்போல்
திங்களும் ஆதித் யனும்இரு கண்களாய்
நம்கூற்றும் நல்குலாவும் மால்.

23.. கதே ஜலே சேது பந்தனம்:
எம்பார் திருமலை ஆழ்வார் விதுராழ்வார்
நம்கண்ணன் என்றிவர்பால் ஆதரம்தான்-- தம்கையால்
தாம்சமைத்த சையா சனமேனும் சோதிப்பர்
மேன்அமர்ந்து என்னோ பரிவு?

24. பெறாவிட்டாலும் சுரக்காதொழிவதே?
பெற்றதாய் மற்றவளாய் தான்தேடி யுற்றதாய்
நற்றவத் தாள்அசோதை நீடபால் -- பெற்றானே!
மூக்குரிஞ்சி அத்தன் முலையுண்ணக் கற்றானாய்
ஏக்கம் ஏதுவால் பிறர்க்கு?

26. உண்ணப் புக்கு வாயை மறப்பரோ?
முடைநெய் முழங்கை வழிவார வேண்டடிசில்
கூடி கிடைத்திட்டும் கண்ண-- னுடைச்செய்ய
காந்தள் முகத்தொளி கண்ணின் அகல்வதேல்
சேந்துவர் கையினது வாய்க்கு?

27. நாம் நாலடி நடக்க , தான் ஆராதனைக்கு
அரியன் எனகாட்டுவதே, என கேதித்தல்:
கைமுதல் ஒன்றின்றி கால்கட்ட வந்தமை
வைகுந்தம் விட்டுஆய்ப் பாடியுள் -- மையார்
கருங்கண்ணி மாதர் பொருட்டாமால் வந்த
கருத்தும் எளிவரவும் போழ்த்து.

28. மெத்தப்படித்த மாலே கோவிந்தா! !
பறைஎன்று வாய்வார்த்தை சொன்னபடி கொள்ளுதியோ?
மறைநான்கின் சாறு பிழிந்து-- நெறியெல்லாம்
பாரில் எடுத்துரைத்த ஞான நிறைமூர்தி (முட்டாளே? )
தேரிலையோ எங்கள் குறிப்பு?

29. கர்ம-ஞான சமுச்சயான் மோக்ஷ :
தான்யார்? தனியன்தான் வந்த வரத்தென்ன?
வான்ஏர் வழிவகை என்னிவைக்காம்-- ஞானம்
பிறந்ந விடியல் பொழுதற்றே அம்மால்
திறத்தடிமை கோலுமாறு பெற்று.

 30. எங்கும் திருவருள் பெற்று.
காம்பு சுரக்கதோல் கன்று விடுவார்போல்
தீம்பால் சுவைதிருப் பாவைதனை -- சோம்பலின்றி
ஓம்பஆண்டாள் போல்நமக்கும் ஆமேமால் கூடியமர் 
சேமநல் வீடுசெய் வாழ்வு.
பாவையர் நோன்பை அநுகரித்து நல்திருப்
பாவை பதிகம் பணித்தநம் -- கோதையின் 
கூற்று அடியார் அவர்கொண்டு மாலிறைஞ்சி
போற்று பறையதை பெற்று.


ஐந்திநோடு பத்துமொரு மூன்றும் பதியொன்றும்
தந்தநம் கோதை திருப்பாவை-- அந்தமோடு
ஒன்றுமாய முப்பதும் எப்போதும் செப்பவே
ஒன்றுமவள் பேறு நமக்கு.


கோதை தமிழ் வேதமனைத்துக்கும் வித்து :

சேநயாகம் தொட்டுபூம வித்தையுள் மூட்டுமெய்
ஞான சுரபிநாலு வேதசார -- மாம்மூன்
எழுத்தவை கோவிந் தனைகூட்டும் (அ) கோதை (உ)
விழுப்பொருள் காட்டும் நமக்கு (ம).

Saturday, January 16, 2016

பூங்கோதைப் பதிகம்.


அவதாரிகை :

நாம் (தேஹாத்மாபிமானிகள்)(Knowing & realization):
ஒன்பது வாயில் ஒளிமதிக் கூரைவேய்
பன்முகப் பற்றுடை இத்தேகம் -- துன்பத்
துறை கோயில் இஃதின் பிறிது உயிர்என்...
உறைப்பில் உணர்வு பழுது.

பர்வத பரமாணு ஓட்டை வாசி:

அதுஅறிந்தார் காண்முனிகள் ஞானத் துயர்வால்
பதுமத்தாள் மால்காதல் மிக்க -- மதிநலத்
தாழ்வாரின் ஒக்குமோ? மங்களத் தோங்குபெரி
யாழ்வாரின் ஆமோ அவர்?

எடுத்துக் கழிகிகத் தோதில்லை:

அப்பெரி யாழ்வாரும் தம்மகளார் ஆண்டாளுக்
கொப்போ எனப்பேசில் அன்றுகாண் -- தப்பாது
நம்மைத்தாள் சேர்த்துமாலுக் காட்படுத்தும் ஆசான்வாய்
தம்மையவள் முன்நிறுத்த லால்

ஆண்டாள் அநுகாரம் பள்ள மடை:

பிரிவும் பயலமையும் மீதூர காதல்
தரியா மடவார் திருமால் -- கருமமவை
தம்பால் ஒருவாரு ஏரிட்டு தாழ்த்தல்தாம்
தேம்பாநீர்ப் பள்ள மடை.

பகவத் ஸம்ஸ்லேஷ இஜ்யா :

துய்த்தபின் நீராடல் சிற்றின்பம் மாலன்பு
துய்ப்பதாய் நாடி அவனடியார் -- மொய்ப்ப
மடந்தையர் ஆங்கவ னோடு உடன்கூடத்
தேடல் சுனையாடல் நோன்பு.

பிரபந்த தாத்பர்யம் :

பாவையர் நோன்பு பனிவிழும் காலையில்
பூவையர் கூடி இடைச்சேரி -- ஆச்சியர்
கண்ணனைக் கண்ணாளம் தான்கட்டி கால்பிடிக்க
எண்ணம் உணர்த்தாம் பொருள்.

மந்திரத்தை :

எட்டெழுத்து தொட்டுணர்த்தும் உட்பொருள்தான் மற்றயார்க்கு
எட்டாதான் கால்பற்றி நிற்றார்கு -- கிட்டும்
படியாற்றும் கைமுதலும்  காண்பயனும் நாரணனே
கோடும் சுனையாடல் புக்கு.

மந்திரத்தால் :

செய்தவேள்வி சிந்தை யராய்அவன் செய்வன
செய்து கொளாதே பதரியுதவச் --  செய்வான்
விரதமதில் வேண்டிற்றும் வேண்டாதும் கொண்டு
உறங்குவான்போல் யோகுசெய்வான் ஏத்து.

மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் :

தன்அலாத தன்னதாக்கை தான்திருட்டு; மேன்உடைமை
அன்னதை யானுடையன் யான்உரியன் -- என்னுமது
பஞ்சம்; உரியஉண வாகவுண்ணா மைப்பிணி
விஞ்ச வளர்ந்தான்பேர் ஒது.

விதேயனான பர்ஜன்ய தேவதைக்கு கையோலை :

உலகம் படைத்தவன் கையடக்கம்; உன்னி
உலகம் படைக்கும் இறையோ -- குலவு
மவன்மந் திரத்து அடக்கம்; அதுவும்
உவந்தவந்த ணர்தெய்வ மாடு.


பிரம்ம ஞானப் பிரபாவம் :

இறையறிவாம் மெய்யறிவுத் தீயினுள் பாபம்
இரையாய் உருமாயும் மற்று -- அறியாப்
பிழையவையும் தாமரை தன்இலைமேல் நீர்போல்
இழையவொட்டா தேபோம் அகன்று.

அனுபவித் தேயற வேண்டுமாம் பாபம்
அனுபவி யாதவை மாயல் -- தானுமென்
என்னில் நெருப்பினை நீர்தணித்தல் போல்கருணை
முன்னால் கருமம் விலகு .

மாடுகன்று ஒன்றின்றி பாலர் களும்ஒளித்தான்
மொட்டவிழ் தாமரை மேநான்தான்; -- தேடல்வாய்
அவ்வவையாய் தானாகி மாயனே மாறல்போல்
எவ்வெவையும் தன்னுள்ளாய் தோற்று.

ஜகதுபாதான காரணம் பிரஹ்மம் :
மாடுகன்று ஒன்றின்றி பாலர் களும்ஒளித்தான்
மொட்டவிழ் தாமரை மேலயனும் -- தேடல்வாய்
அவ்வவையும் தானாகி மாயனே மாரினாப்போல்
எவ்வெவையும் தன்னுள்ளாய் தோற்று.
பாலே மருந்து :
அடிஇரண்டும் காப்பு இனிமை அடியார்
படிஎன்றால் அம்மால் அவனின் -- படியும்
அதுவே! பிடித்துச் சுவைத்து சகடம்
உதைத்து நடத்து மவன் .
அகவிதழும் புறவிதழும் :
உள்நாட்டுத் தேசு உடன்கூடி செய்அடிமை
வள்ளல்மால் வானோர்தம் நாயகர்க்கு -- உள்ளத்தே
உள்ளாம் உயிர்தன் நிறம்பெறலும் மேல்நாடாம்
கள்ள உடலைக் கரந்து .
ஸககார நிரபேக்ஷோ உபாயம் :
இராக்கதர் தின்ற உடல்காட்டி வந்து
அறிவிப்பார் தாங்களாக ஏபரமே! -- சேர
வரும்நம் வீடணற்கு இக்கரை போந்த
பரமாவா என்னும் அது.
உபாய அத்யவசாயம்:
தன்முயற்சித் தான்ஏது மின்றி அவன்கையே
தன்உயர்த்திக் காம்பழு தில்உபாய -- மென்பயிற்றுச்
சோம்பிக் கிடப்பார் உறவும் அபிமானம்
நம்பி ஒருபா டிரு.
ஸ்வகத ஸ்வீகாரம் நம்நிலை :
சேயன் எளியன் திருமா மகள்கேள்வன்
தூயவின் நாமம் பலபலவும் -- வாயின்
மொழிதல்மால் தன்னை அணைந்துகால் கட்டும்
வழியதாய் நாடல் கடை.
பரகத ஸ்வீகாரம் ஆழ்வார் நிலை :
நோன்பும் நியமும் தன்முயற்சி கோலுவார்
அன்றியருள் ஞான விளைநிலமாம் -- என்புடல்
கூடவேர் பற்று கழற்றாதார் போலாழ்வார்
நாடும்மால் அன்றோ வழி.
சித்த சாதன நிஷ்டை :
பலன்கரு தாது முயல்வார் இலையாய்
நலன்வேண்டின் நாமியற்றல் கூடும்!-- சொலப்புகில்
மாலோலன் தம்முயற்சி கோலாதார் அம்முயற்சி
தோலா வகையார் செயல்?
கருமம் கைங்கர்யத்தில் புகும் :
செயலொன்றும் நம்மால் பயன்மூன்று நீடும்;
உயப்படு நேர்பயன் போல்துணைப் -- பயன்,காணாச்
சூழப்பயன் என்றிவை கோலா கருமத்
 தெழுபயன் மாலவன் தொண்டு.
யாதாத்மிய ஞான சந்தேசம் :
செயல்அறிவு பக்தி திருத்தாள் பரிவிவைமேல்
 மேயகருமம் நான்கதூம் மால்தொண்டு -- தூய
 உயிர்பால் மிளிர்வவன் இட்ட வழக்கென்
துயக்கித் தனைத்தான் நீடு.
அத்தாணிச் சேவகத்தில் பொதுவானது நழுவும் :
பிராட்டி ஸ்வசக்தியை விட்டாள் .
திரௌபதி லஜ்ஜையை விட்டாள் .
திருக்கண்ணமங்கை ஆண்டான் ஸ்வவியாபாரத்தை விட்டார்.
இப்படி உபாயத்துக்கு அதிகாரிகளான பிராட்டியும், திரௌபதியும், திருக்கண்ணமங்கை ஆண்டானும் போலே
உபேயத்துக்கு அதிகாரிகள் இளையபெருமாளும், பிள்ளை திருநறையூர் அறையரும் . சிந்தையந்தியும் ஆவர்.
இவர்களின் அவஸ்பேயாக்ஷிதங்கள் :
பிரியில் தரியாமை .
தன்னைப் பேணாமை .
ஏவிக் கொள்ளவும் வேணும்.
ஸது நாகவர ஸ்ரீமான்;
அந்தரிக்க்ஷ கத ஸ்ரீமான்;
லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பன்ன:
என்றிருக்கிற உபேயத்துக்கு அதிகாரிகளின் அத்தாணி சேவகத்தில், பொதுவானது நழுவும். ஆகவே இவர்கள் ஸ்ரீமான்.
ஆற்றல்,பெண் பாலார்தம் கூச்சம், சுயத்தனம்
பற்றுப்பான் தாள்பற்றும் ஆறதில் -- நிற்றார்க்கும்;
அற்றபற்று நோற்றுப் பெறல்விழை தொண்டதூம்
 மாற்றமில் சேவகத்தே வல்.
ஆற்றல் - ஸ்வசக்தி
பெண்பாலர்தம் கூச்சம் - ஸ்த்ரீத்வ தனமாகிற லஜ்ஜை
சுயத்தனம் - ஸ்வ வியாபாரம் என்றிவை
பற்றறுப்பான் தாள்பற்றி நிற்பார்க்கு - உபாயத்தில் தீக்ஷித்தவர்களுக்கு
தூற்றதாம் - நிக்ருஷ்டமாய் விடத்தக்கவை.
அற்றபற்று நோற்று - ஆகிஞ்சின்ய அநன்யகதித் வாதிகளை முன்னிட்டுக் கொண்டு வகுத்த சேஷி பக்கல் பண்ணின சரணாகதிக்கு அனந்தரபாவியான
பெறல்விழை தொண்டதூம் - பிரார்த்தித்து பெறவேண்டிய ஸகஜ தொண்டுதனை
மாற்றமில் - ஸமிக்ஞா சூசித ஆக்ஞா ரூபேண /அதவா/ அவன் புன்சிரிப்புக்கு உசிதமாய்
 ஏவல் - சேஷித்தானும் தன்முகப்பே ஏவிப்
சேவகத்து - பணிகொள்ளவேண்டும் என்ற இத்தால் ''அருள்பாடிட்டு ஸ்ரீகார்யம்'' கொள்கையாகிற அவன் மதித்த கைங்கரியம் செய்யப்பெற வேண்டும் என்கிறது. அதுவும் ''இறைவா நீ தாராய் பறை'' என்பத்துக்குச் சேர அமைய வேண்டுமாகிற அனுபந்தம் இதிலே அடங்கும்.
மரணாந்தாநி வைராணி :
(பகவத் பிரவிருத்தி விரோதி ஸ்வபிரவ்ருத்தி நிவிருத்திஹி சரணாகதி).
இறந்தபின் நம்பால் அவன்செய் விரோதம்
துறந்தானாய் மாயும் அதுவால் -- உறவினன்நீ
செவ்வே கருமம்செய் வீடணா! என்பணித்த
அவ்வோ விலக்காமை காப்பு!
பாகவத ஸமிர்த்தி :
தன்னடியார் நோக்கி அருள்வான் அரங்கனார்
முன்னடி போக்கியவர் பின்நடக்கும் -- அன்பனவன்
 சூழ்த்தொடையல் காணாக்கண் பாழ்த்தமுகத் துப்புண்;
தொழாக்கை யன்றுலக் கை .
பாகவத பரிபூர்த்தி :
அடியார் அவர்பழிப்பும் தம்பால் கொடையாய்
நுடியா தவைஇசைவார்க் கன்றோ? -- ''கடியார்
துளப முடியார் அடியான்'' எனுமவ்
வளப்பம் உடைத்தாய் முடிந்து.
விஷ்ணுநா வியபதேஷ்டவ்ய :
கிராம குலாத்தி பரிமாற்றம் வேண்டாதே
''இராமா நுசன்தன் அடியானென்'' -- கூறு
மொழியே உகந்து உபசரிப்பார் நாடி
வழிபடலே மாலின் உகப்பு.
குருபரம்பரையை விடுத்த த்வயாநுசந்தானமும்
தேவதாந்திர பஜனத்தொடே ஒக்கும்:
குருமார் நினைவு இறையுணர் முன்னம்;
திருவார் பரிவும் அவர்சேர் -- நெறியாய்
மறைசேர் பயன்வாய் துறைசேர் சரண்தாள்
முறையார் முயல்வார் குறித்து.
வான் இளவரசு வைகுந்தக் குட்டன் :
(போக, போக்கிய, போக்த்ருத்வம்)
ஆடரவின் சூழ்தொடையில்; புட்சிறகான் வீழ்நிழலில் ;
வீடுலகில் சேனாநி சேண்பிரம்பின் -- ஆடுவான்
 வாழ்முதலாம் நம்மின் உயிர்முதலாய் விண்ணுளார்
சூழ மகிழ்முதலாம் ஆங்கு .
புருஷம் கரோதி புருஷகார :
தேவன் ஒருவன் குறியது கூறிடில்
மேவல் முடியல் இடையே -- சுவைத்தல்
வியன்பட யார்செயல் தெய்வமவன் நம்பால்
இயல்பினன் செய்வாள் திரு.
சோர சதுஷ்டயம் :
கன்னக் களவு கொளுவார் நால்வராவார்;
தன்னை உயர்த்தி படைத்தவன் -- தன்னை
அவரனாய் இன்னும் குணமிலை கீழ்மேல்
அவனதில்லை என்பார் அவர்.
அவாப்த ஸமஸ்த காமத்வம் :
இதைவிட ஈது எனவாய் மிகைப்படா
யாது முடிவோ அதுவீடு -- அத்தை
அடைய அனைத்ததன் இன்சுவை கூடா
அடைவார்க்கு காமம் முடிந்து.
பகவத் பாதோதகம் பாவநம்;
பாகவத பாதோதகம் ஸுபாவநம் :
காயசுத்தி ஆறின் வருநீறு; ஆன்மசுத்தி
பாயும் சடைச்சாறு ஆஅதன் -- மேயபால்
 சாணத்தின் சாறதனின் தூயதே மாலடியார்
மாணத் திருவடி சாறு.
குணபால மத யானை :
ஈட்டிய புண்ணியம் பெற்றாலும் கிட்டுமோ?
மட்டில் பெரும்பாபம் செய்வானைக் -- கூட்டுமோ?
பட்டத்து யானை செயுமவை ஆராயும்
திட்டத்தோ? எற்றாவன் யான்?
கடக்க கிருத்யம் :
தன்வழி தானும் வருவானை நேர்படுத்தி
நம்வினை போக்கி அடிசேர்ப்பாள்; -- மன்கருணை
மாயா வகைதிரு மால்குணம் காப்பளாம்
தாயவள் தம்கருணை காப்பு.
பாரதந்திரிய, அநன்யார்ஹத்வங்கள் :
பெற்று மறந்து முடிந்து பிழைக்கலாம்
பாற்று பிராட்டி தனைராமன் -- தூற்றின்வாய்
கானகம் போக்கினும் அன்னை முடிந்திலளாய்
வானகம் வேட்டா திருப்பு.
உபாய ஸ்வபாவ ஸ்வரூபம் :
தாமரையாள் நோக்காமால் தான்கார்யம் செய்வானேல்
கோமான் இறையாண்மை கொத்தையாய் -- தமர்அது
மெச்சும்? அவள்வேட்ட ஈதல் நிறமாய் (ஸ்வபாவம்)
இச்சை உயிராம் (ஸ்வரூப) குணம்.
ஸ்தூணான் நிகனந் நியாயம் :
அன்னை அருளால் அடியான் எனவாகித்
தன்னை அடைந்தார்க்கு ஆங்களித்த -- பின்னை
பிழையது ஆகா வகையே குறையங்
கிழையா தலுங்குவார் கோல்.
குணகோடியிலாம் தோஷம் உபாதேயம் :
குவிதல் விரிதல் இலையாய மேனி
குவிதல் மலர்தல் இவைதான் -- புனைதல்
குணமோ எனபிணக் காவார் அடியார்
அணைய மகிழ்வான் திறம்.

பக்தபக்ஷபாதம் கேடல்ல மாடு :
உதங்க பிரச்னத்துக் குத்தரம் நீடா
சுதந்திரன் பத்தரவர் சார்ந்தே-- உதகலதும்
வேண்டுதல் வேண்டாமை இல்லாதான் வாழ்குணமாய்
கொண்டாடப் பாற்றக் குணம்.
மங்களாசாசனத்துக்கு பலவியாப்பத்தி அதுவே :
வாழிவாழி என்றேத்த வாய்க்குமத் தொண்டதும்
கேழில் பயனாம்; பிரிதொரு -- சாழல்
இலையாய அவ்வடிமை தானும் பணிசெய்
தலதேல் சீவியா பண்பு.

ஸ்வரூபாநுரூபமான கைங்கர்யமேலும் பிரார்த்தித்த பெற வேண்டும் :

உன்னை  விடுத்தபிரி தொன்றை கொடுத்து
எம்மை விலக்காதே கொள்ளடிமை; -- நன்மை
நமக்கத்துவால் வேட்டுமது ஈட்டி  உவகை
உமக்கது என்றுகொள்நாட் டே!

மாம் -அஹமின் அர்த்தம் மால் - ஆலின் இலையாலில் ஸுவியக்தம்:
கடலின் குளப்படி எற்றோ நெடியமால்
மாடுடை மாலின் மயக்கத் -- தடங்கும்
நமக்குடைக் காதல்! இடுசிவப்பு மேன்மை;
தமக்குடை அவ்எளிமை பீடு.

முக்த போகம் :

தம்மையே தாம்தமர்க்கு நல்கி வெலவருவான்
தம்பால் எதிரம்பு பூட்டாதே -- உம்மால்
இனித்தோற்றோம்  என்றிருப்பார் பக்கல்தாம் தோற்பார்
நனிநல்கல் முக்தபோ கம்.
தன்னைப்போல் ஊரும் நாடும்:
இறையுள நற்குணம் குற்றமிலாப் பண்பரேனும்
யாரே குவலயத்தில் யாதும் -- குறையிலார்?
புண்ணியன் கண்ணன் நண்ணி இருப்பார்க்கு
திண்ணமனி இல்லை அவா!
தனக்கேயாய் எனைக்கொள்ளு மீதே :
அடிமைக்கண் ஆனந்தம் தன்னதன்றி தேவன்
படியாய் இளவல் இருவர் -- அடிமையும்
நீடு மிடத்துமே அத்தலைக்கு ஏற்புடைத்தாய்
நாடும் நமக்காதல் பின்பு.

தம்மை முன்னிடுவாரை தாம்முன்னிடுகை ஸ்வரூபம்  :
அனுகரித்து சொன்னவை ஒன்பதோடு சேர்ந்த
பனுவல் இருபத்தும் தானாய்க்  -- தனித்துப்
பணித்த நெரவலொன்றும் கோதைதன் பாவைக்
கணியாதல்  ஆழ்வார்முன் னிட்டு .

திருப்பாவை அந்தாதி .


பிராப்ய பிராப்பாக ஸங்கிரகம்

மார்கழித் திங்கள் மணவரைக் காட்டவே 
பார்புகழ் நாரணனைக் கூடுமென -- நேர்ந்தனள் 
பாவையர் நோன்பு! உரிமையும் உணர்த்துவாள்  
பூவையர் கூட்டாக வையத்து!

கிருத்யாக்ருத்ய சங்கல்பம் :

வையத்து வாழ்ச்சி பரமன் அடிபாடல்!
செய்முறை யாவும் ஒழுகலோடு -- ஐயம் 
விலக்கி  அடியார் அவர்வை கரைநாடல்  
துலங்குவார் சன்மம்சீர்த் தோங்கு!  

பர சமிர்த்தி பிரயோஜனம் :

ஓங்கு பெரும்சென்நெல் எங்கும் தழைப்பவே 
தேங்கு  புனல்பெருகி கற்புடை -- மங்கையார்  
குறித்தும் குலமன்னர் அந்தணர்  என்றிவர்க்காய் 
வாரிஎழ ஆழியான் வேட்டு!

விதேயனான பர்ஜன்ய தேவதைக்கு கையோலை  :

ஆழிதன் ஆகத் தெழுமேக வண்ணா! நீ 
ஊழியான் கைத்தலத்து ஆழிபோல் -- சூழல் 
சுழித்து எமக்கு தவுமேல் வளப்பம் 
தழைப்பபெய் மாயம் விடுத்து!

பிரம்ஹ ஞான பிரபாவம் :

மாயனை! மாமதுரை மன்னனை! வாயினால் 
ஓயாமல் ஓதி மனம்மொழி -- தோய 
நினைப்பிடுவார் பாபம்போம்! சேமம் 
அனைத்துமாம்! புள்ளுவம் அன்று!

ஆஸ்ரயணத்துக்கு அர்ச்சா சௌலப்யம் என்கை : 

புள்ளும் சிலம்பின! பிள்ளாய்  உணர்ந்திலையோ?
வெள்ளத் தரவில் துயின்றவன் -- உள்ளம் 
புகுந்து குளிர்ந்தாயால்? புள்ளரையன் கோயில் 
சகத்திலாய் மற்றவன் கீச்சு!

சேஷத்வத்துக்கு இசைகை  :

கீசுகீசு என்று கலந்தன  கூட்டில்  
நேசமுடன்  புட்கள்!நம் நாயகியே! -- ஏசல்  
தவிர்ந்தவெம்மை சேடப் பொருள் எனநீ 
உவந்திருந்து  கீழ்மை அகற்று!

பாரதந்தர்யத்தில் பர்யவசிக்கை :

கீழ்வானம் வெள்ளென்று அக்ஞானம் வீழ்தலும் 
ஏழையார் வாழ்வு பகலதாய் -- சூழலினி 
அடியார் அவர்பக்கல்  இட்ட வழக்காய் 
நடமினோ தூமுறுவல் ஏற்று!

போக்த்ருத்வம் விலக்கி போக்யதை ஆகல் :

தூமணி  சேரொளி அஃதா மாமாயன் மாதவன் 
தேமதுர தாட்கடிமை நேருவதும் -- காமம் 
தமக்கென் னாது அவன்பொருட்டாய் ஆகி  
உகப்பும் உரித்தவர்க்காய் நோற்று!

சித்த தர்ம போதனம் :

நோற்று சுவர்க்கம் புகப்பெறல் ஆற்றுவான் 
எற்றுக்கோ? அம்மனாய்! செய்தவேள்வி -- நாற்றத் 
துழாய்முடி நாரா யணன்நிற்க நம்மால் 
சூழப் பெறாதவன் கற்று!

அனுஷ்டான ஔசித்யம் :

கற்றுக் கறவை பலகறந்து தன்கடமை 
ஆற்றுவான் பொற்கொடியே! போதராய்! -- போற்றி 
முகில்வண்ணன் பேர்பாட வேண்டி இரப்ப 
ஆகுமோ கனையா திருப்பு?

அநனுஷ்டான கார்யகரத்வம் :

கனைத்து எருமை முலைவழியே பால்சோ
ரனைத்தில்லம் சேராகும் ! நற்செல்வன் -- தானைத் 
தங்காய்! மனத்துக் கினியானைப் பாடவும் 
இங்கோ உறங்குமிப் புள்? 

ஸ்வயம் பாகம் கோஷ்டி பகிஷ்காரம்  : 

புள்ளின்வாய்க் கீண்டானை! பொல்லா அரக்கனைக் 
கிள்ளிக் களைந்தானை! கீர்த்திமை -- உள்ளத்தே 
உள்ளி எமைத்தள்ளல் கள்ளம்என் றல்லால்என்?
வள்ளன்மை உங்களுக்கு ஈது?

சௌந்தர்யம் ருசி ஜனகம் :

உங்கள் புழக்கடை செங்கழுநீர் வாய்நெகிழ்ப்ப, 
சங்கோடு சக்கரம் ஏந்தும்நம்  -- அங்கை 
அழகன்!மால்! பங்கயக் கண்ணணைப் பாட 
எழுவாய்!நீ! எல்லே உணர்!

ஏற்றிட்ட தோஷத்தை இல்லை என்னாது இசைகை :

எல்லே! இளம் கிளியே! எல்லாரும் போந்தார்என் 
றல்லால் புகுந்தெண்ணிக் கொள் ! அல்லவை -- சொல்லுமேல் 
நானேதான் ஆயிடுக! மாயனை பாடலும் 
தானேநின் நாயகம் நீடு!

பாகவத சம்பந்தம் அநுகல்பம் :

நாயகனாம் நந்தகோபன் கோயில்முன் வாயில் 
நேய நிலைக்கதவம் காப்போனே!  -- ஆயர் 
சிறுமியரோம் ஈண்டு துயிலெழப் பாடிப் 
பெறுவோம்! அம்பரத் தோடு!

ஸ்தாநீகரை முன்னிடல் : :

அம்பரமே  தண்ணீரே சோறே அறம்செய்யும் 
எம்பெருமான் நந்தகோ பாலஆ! -- எம்பிராட்டி 
அம்மே! அசோதாய்! செல்வா! பலதேவா! 
உம்மால்யாம் உந்தல் கடன்!

புருஷகார பிரபத்தி  : 

உந்து மதகளி றன்னநம் நந்தகோபன்! 
சொந்த மருமகளே! நப்பின்னாய்! -- செந்தா 
மரைக்கையால் வந்து திறவாய் மகிழ்ந்து !
நிறைவிளக்கம் அஃதாம் எமக்கு!

பிராபிக்கையில், மிதுனத்துக் குண்டான த்வரை:

குத்து விளக்கு தனைக்காட்டி மற்றவை 
அத்தனையும் காட்டும்! நப்பின்னை! -- குற்றம் 
கணிசியாது மற்றை அருள்நடப்ப செய்வளே! 
மாணியாது  முபற்றும் முடித்து!

பெரிய பிராட்டியாலே பேறு என்கிறது :

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று 
கப்பம் தவிர்க்கும் கலியே! உன் -- அப்பணைக்கு  
ஒப்பனவே செய்தருள்  நப்பின்னை எம்மோய்! 
ஒப்பித்தெம் மின்ஏற்றம் செய்! 

ஸ்வரூப பிர்யுக்த தாஸ்யம் :

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிக்கும் 
ஆற்றல் பெரும்பசுக்கள் முத்திறமும் -- ஆற்றப் 
படைத்தான் மகனே! உமக்கடிமை எம்மின் 
படியது! அங்கமல மற்று! 

அநன்யார்ஹ சேஷத்வம் :

அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான 
பங்கமாய் வந்தார் எனவந்து -- நுங்கண் 
தலைப்பெய்தோம்! அங்கண் இரண்டும் 
மேலைஎம் பால்மாரி போன்று! 

கர்ம பாரதந்ரியம் :

மாரி மலைமுழஞ்சில் மன்னிய சிங்கம்தன் 
மூரி நிமிர்த்து முழங்கி -- புறப்படுமா 
போலே அடிபட இங்கனே போந்தருளி 
மேலா மனைத்தும்தா ஆன்று!

மங்களாசாஸனம் :

அன்றிவ் உலகம் அளந்துநீ பெற்றனை  !
உன்றன் கழல்வாழி! பல்குணத்த -- நின்திறலும்  
பல்லூழி  நீடுவாழி!  எம்முடைச் சேவகம் 
நல்கி  ஒருபா டிரங்கு!

அநன்யப் பிரயோஜனர்களாக வந்தமை கூறல் :

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்திக் 
கிருத்தி! அற்றதற்றோ எம்மின் -- கருத்தும்!
திருத்தக்க செல்வமும் சேவகமும் கூட்டி 
வருத்தமும் தீரமகிழ் மால்! 

ஸாம்யாபத்தி மோக்ஷம் :

மாலே மணிவண்ணா!  மார்கழிநீ ராடுவான் 
மேலையார் செய்வனகள் வேண்டுவன -- ஆலின் 
இலையாய் அருளென்ன மாற்றம் உனக்குடை 
மேநிலை எட்டதும்  கூட்டு!

சாயுஜ்யம் பலம்  :

கூடாரை வேல்லும்சீர் கோவிந்தா! உன்தன்னைப் 
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் -- ஆடை 
அணியும் கூடி இருந்து  குளிர்தல் 
பேணினோம் நோன்புள்  கரந்து !

உபாய வரணம் :

கறவைகள் பின்சென்று உண்போம் அறிவின் 
புறப்பாடு இல்லாமால் உன்னைப் -- பிறவி 
பெறும்தனைப் புண்ணியம் யாமுடையோம்! கோவிந்தா!
ஆறும்நீ யாதலே சித்து!

புருஷார்த்த நிர்ணயம் :

சிற்றம் சிறுகாலை வந்துன்னைச் சேவித்து 
குற்றேவல் லெங்களைக் கொள்வாயால் -- உற்றோமாய் 
ஆட்செய்வோம்! மற்றைநம் காமங்கள் மாற்று ! எம் 
பாழ்த்தவினை வங்கத் தழுத்து !

பல வியாப்த்தி :

வங்கக் கடல்கடைந்த மாதவனால், கேசவனால் 
திங்கள் திருமுகத்து சேயிழையார் -- அங்கப் 
பறைகொண்ட வாற்றை அணிபுதுவை கோதை  
நிறைசெய்தாள் மார்கழிஇன் புற்று! 

கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன்  ஸ்ரீநிவாச தாஸன்.
(K S Srinivasan).